கனடாவிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் - அரசாங்கம் எச்சரிக்கை - Yarl Voice கனடாவிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் - அரசாங்கம் எச்சரிக்கை - Yarl Voice

கனடாவிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் - அரசாங்கம் எச்சரிக்கை



ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைகாலத்தில் தனது மக்களை வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என  கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

ஒமிக்ரோன் பரவல் எங்களிற்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது தொற்று அதிகரிப்பு போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயண ஆலோசனைகளை நான்கு வாரங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் பெருந்தொற்று நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுள் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.


கனடாவிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என  எங்கள் அரசாங்கம் தனது பிரஜைகளைக் கேட்டுக்கொள்கின்றது என சுகாதார அமைச்சர்  செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ள பிரஜைகளிற்கு தற்போது பயணம் மேற்கொள்வதற்கான நேரமில்லை என நான் தெளிவாக தெரிவிக்க விரும்பு கின்றேன் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒமிக்ரோன் பரவிவருவது எங்களை அச்சப்படவைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் கனடா பிரஜைகள் பாதிக்கப்படலாம் அல்லது நாடு திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post