ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 11 மணியளவில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் தேசிய மாநாடு டிசம்பர் 19ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னேற்பாடாக,மாவட்ட ரீதியாக கட்சியை வலுவூட்டும் வகையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேடமாக அக்கட்சியின் பிரதி செயலாளர் திலகஸ்ரீ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜிபாஸ்கர், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.
Post a Comment