கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு க்கு எதிராக போராட்டம்! எதிர்ப்பையடுத்து திரும்பிச் சென்ற நில அளவைத் திணைக்கம் - Yarl Voice கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு க்கு எதிராக போராட்டம்! எதிர்ப்பையடுத்து திரும்பிச் சென்ற நில அளவைத் திணைக்கம் - Yarl Voice

கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு க்கு எதிராக போராட்டம்! எதிர்ப்பையடுத்து திரும்பிச் சென்ற நில அளவைத் திணைக்கம்



வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post