மத்திய ரிசர்வ் காவல்படை வி.ஐ.பி பாதுகாப்பில் ஈடுபடுத்த 32 பேர் அடங்கிய பெண்கள் கமாண்டோ படைப்பிரிவை உருவாக்கி உள்ளது.
இது நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
இசட் பிளல் பிரிவில் பாதுகாப்பு பெறுவோறுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தில்லியில் வசித்து வரும் முக்கிய தலைவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பெண் கமாண்டோக்கள் 10 வாரம் வி.ஐ.பி பாதுகாப்பு, உடல் சோதனை, ஆயுதமில்லா சண்டையிடும் முறை, சிறப்பு ஆயுதங்களை கையாளும் முறை ஆகியவற்றில் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தலைவர்களின் வீடுகளில் பாதுகாப்பு அளிப்பர் மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் கூடவே சென்றும் பாதுகாப்பு அளிப்பர் எனவும் குறிப்பாக பெண்களை சோதனையிடுவதில் இனி தடங்கல் ஏதும் இருக்காது என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment