யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 12 வது தடவையாக இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஹார்ன்போல் மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த வர்த்தக சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் தங்கள் உற்பத்திகளை வடக்கு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான களமாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
விவசாயம் , கல்வி, உணவு, தொழில்கள், இயந்திரங்கள், கட்டுமானம், நுகர்வோர், மின்னியல் மற்றும் தொழில்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கொண்ட பல வர்த்தக விடயமாக அமைந்துள்ளது.
அத்துடன், கண்காட்சியைப் பார்வையிட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைவர் நந்தரூபன் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் பங்கேற்புடன் எல்.ஈ.சி.எஸ் (LECS) நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன தர்மதாஸ தலைமையில் வர்த்தக சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment