13 ஜ நாம் ஏற்கவில்லை! சமஷ்டியே இலக்கு! குழப்புகிறது முண்ணனி! தமிழ்க் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு - Yarl Voice 13 ஜ நாம் ஏற்கவில்லை! சமஷ்டியே இலக்கு! குழப்புகிறது முண்ணனி! தமிழ்க் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு - Yarl Voice

13 ஜ நாம் ஏற்கவில்லை! சமஷ்டியே இலக்கு! குழப்புகிறது முண்ணனி! தமிழ்க் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு



13வது திருத்தச் சட்டம் ஒரு தீர்வு இல்லை. அதனை நாம் தீர்வாகவும் எந்தக்காலத்திலும் யாருக்காகவும் ஏற்கப் போவதுமில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை.

இவ்வாறான நிலைமையில் நாம் அதனை ஏற்று விட்டதாக சில தரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றதாக தமிழ்க் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஆறு தமிழ் கட்சிகளின் ஊடக சந்திப்பு ஒன்று இன்று யாழில் நடைபெற்றது.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post