அரசியல் கோமாளிகளின் 13 ஆவது திருத்த நாடக நிகழ்ச்சி நிரலில், மக்களே நீங்கள் ஏமாற வேண்டாம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காண்டீபன் மற்றும் சுகாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன ஊர்தி பிரசாரத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்று கூறும் சிலர் இன்று 13ஐ கையிலே எடுத்து ஜனநாயகத்தை புதைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். இது முன்னணியின் போராட்டம் அல்ல. தமிழ் மக்களின் போராட்டம்.நாம் முதலைமச்சர் கதிரைக்கு ஆசைப்படவில்லை. மக்களோடு மக்களாக நிற்க தான் நாம் விரும்புகின்றோம்.
2013 ஆம் ஆண்டு தொடக்கம் முதலமைச்சர் கதிரையை தேய்த்து, ஒன்றுமே செய்யாத விக்னேஸ்வரன், மக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் வருவேன் என கூறிக்கொண்டு இருக்கின்றார். நாடாளுமன்றில் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏனென்றால் அங்கே சிங்கள மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் அவர் பேச மாட்டார்.
முதல் பொங்கலுக்கு தீர்வு வரும் என சம்பந்தன் ஐயா கூறிக்கொண்டிருந்தார். இப்போது சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறுகின்றனர்.இவர்களின் பம்பல் கதைகளுக்கு பதில் சொல்வதற்கு நேரமில்லை. நாம் கொள்கை உடையவர்கள். இவர்களின் கேள்விகளுக்கு பின்னர் பதில் கூறுகின்றோம் என்றார்.
Post a Comment