ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி தற்பொழுது நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து சற்று முன்னதாக ஆரம்பமானது.
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது
இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பேரணியானது கிட்டுப் பூங்காவிற்கு சென்று நிறைவடையவுள்ளதுடன் அங்கு பொதுக்கூட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Post a Comment