நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி, மாரவில ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சிறுமி கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment