பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான். இம்ரான் கானுக்கும் ரீஹம் கானுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அடுத்த ஆண்டே (2015) ரீஹம் கானும் இம்ரான்கானும் விவாகரத்து செய்துகொண்டனர்.
ரீஹம் கான் தனது முதல் கணவர் இஸ்ஜாஸ் ரீஹம் என்பவரை 1993-ம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து இம்ரான் கானை ரீஹன் கான் 2014-ல் திருமணம் செய்து 2015-ல் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளரான ரீஹன் கான் நேற்று தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பிய போது துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இஸ்லாமாபாத்தின் ஷாம்ஸ் காலணி பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது ரீஹன் கான் சென்ற காரை பைக்கில் வந்த இருநபர்கள் இடைமறித்தனர். அந்த நபர்கள் ரீஹன் கானின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக ரீஹன் கானுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ரீஹன் கான் காரை நிறுத்தும்படி கூறினார். மேலும், அவரின் பாதுகாவலர்களும் காரில் இருந்தனர். பைக்கில் வந்த இருவர் ரீஹனின் காரை இடைமறிந்த அவர்களை துப்பாக்கிமுனையில் காரை சிறைபிடித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இருவரும் பைக்கில் தப்பிச்சென்றனர்.
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலை தொடர்ந்து ரீஹம் கான் தனது முன்னாள் கணவரும் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக ரீஹம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது எனது கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த இருவர் எனது காரை துப்பாக்கி முனையில் இடைமறித்தனர். நான் இப்போது தான் வேறு காருக்கு மாறியுள்ளேன்.
எனது தனிப்பாதுகாவலரும், டிரைவரும் அந்த காரில் இருந்தனர். இது தான் இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானா? கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்கள் நிறைந்த நாட்டிற்கு வரவேற்கிறோம்’ என்றார்.
Post a Comment