20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும் - சிறிசேன - Yarl Voice 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும் - சிறிசேன - Yarl Voice

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும் - சிறிசேன



20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்கி விட்டு, குறைபாடுகளைச் சரி செய்து, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனிக் கட்சி ஒன்றினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. இதனால், திருடர்கள், ஊழல்வாதிகள் இல்லாத புதிய கூட்டணி அரசாங் கத்தின் கீழ் விரி வாகத் தேசியக் கொள்கையை உருவாக்கி, புதிய பயணத்துக்குத் தலைமை தாங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகின்றது என்று அவர் தெரிவித்தார்.

பிரதேச சபை முதல் பாராளுமன்றம் வரை அனைத்து இடங்களிலும் திருடர்கள் இருக்கின்றனர். பிரதேச சபைகளில் மணல் அனுமதிப் பத்திரம் மூலம் தரகுப் பணம் பெறுகின்றனர்.

பாராளுமன்றத்துக்குச் சென்றதும் திட்டங்கள், விலை மனுக்களின் மூலம் தரகுப் பணம் பெறுகின்றனர்.

அரசாங்கம் சுசில் பிரேமஜயந்தவுக்கு கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் 6 ஓட்டங்களை எடுத்தது போல் செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை கிரான்ட் மவுண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post