உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால் ரஸ்யாவின் எரிவாயுவை மேற்குலகிற்கு அனுப்பும் திட்டத்தை தடுப்போம் - அமெரிக்கா எச்சரிக்கை - Yarl Voice உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால் ரஸ்யாவின் எரிவாயுவை மேற்குலகிற்கு அனுப்பும் திட்டத்தை தடுப்போம் - அமெரிக்கா எச்சரிக்கை - Yarl Voice

உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால் ரஸ்யாவின் எரிவாயுவை மேற்குலகிற்கு அனுப்பும் திட்டத்தை தடுப்போம் - அமெரிக்கா எச்சரிக்கை



ரஸ்யா உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால்மேற்குலகிலிருந்து  ரஸ்யாவிற்கு எரிவாயுவை அனுப்பும் குழாய் திட்டத்தை ஆரம்பிப்பதை  தடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஸ்யாவிலிருந்து ஜேர்மனி வரை செல்லக்கூடியநோர்ட்ஸ்ரீம் 2 திட்டத்தை ஆரம்பிப்பதை தடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஸ்யா தாக்குதலை மேற்கொண்டால் இந்த திட்டம் தடைகளை எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா உக்ரைன்மீது; தாக்குதலை மேற்கொண்டால் நோர்ட்ஸ்ரீம்2 திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த திட்டத்தை அமெரிக்கா எவ்வாறு தடுக்கும் என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தினை தடுப்பதற்கு ஜேர்மனியுடன் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிவாயு விநியோக குழாய் திட்டம் உட்பட பல வகையான தடைகள் குறித்து ஆராய்ந்துவருவதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நோர்ட் ஸ்ரீம் எரிவாயுவிநியோக குழாய் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு ஐந்து வருடங்களாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த திட்டம் உருவாகியுள்ளது- போல்டிக் கடலின் ஊடாக ரஸ்யாவின் ஜேர்மனிக்கான எரிவாயு விநியோகத்தினை  இரட்டிப்பாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post