ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியில் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment