உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இன்றையதினம் (12.01.2022) இடம்பெற்றது
இன்றையதினம் காலை 9.30 மணியளவில் US தனியார் வீடுதியில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின்போது சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய வகையில் நடத்தப்பட்ட இந்த புதிய நிர்வாக தெரிவில் சம்மேளனத்தின் புதிய தலைவராக வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அச்சம்மேளனத்தின் புதிய செயலாளராக வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயகாந்தன் துவாரகாவும் பொருளாளராக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருமதி தயாளராஜன் பௌலீனா சுபோஜினியும் தெரிவுசெய்யப்பட்டள்ளனர்.
அத்துடன் குறித்த சம்மேளனத்தின் உபதலைவராக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி கௌசலா சிவாவும் உப செயலாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி சந்திரகுமார் அனுசியாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய வகையில் தலா ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment