தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமதுவ நுழைவாயிலில் மது போதையில் சாரதி ஒருவரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு பொறுப்பதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்போது அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் Cae0075 என்ற இலக்கம் கொண்ட வாகனம் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை பொலிஸார் விசாரணை செய்த போது OIC ஒருவருடன் மது அருந்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருப்பதாக வாகனச் சாரதி தெரிவித்திருந்தார்.
குறித்த சாரதி பொலிஸாரின் விசாரணையைப் புறக்கணித்ததுடன் அவ்வேளை அவர் தனது கைத்தொலைபேசியை எடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது அவர் மது அருந்தியதாக நம்பப்படும் நபரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
விசாரணைக்கு நிறுத்தப்பட்ட தனது நண்பரை உடனடியாக விடுவிக்குமாறு பணியில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி களை குறித்த பொறுப்பதிகாரி திட்டியமை தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஓ.ஐ.சி.யின் கட்டளைக்குப் பணிய வேண்டிய நிலையில் பொலிஸார் அதிவேக நெடுஞ் சாலையில் மது போதையில் வாகனம் செலுத்திய நபரை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
Post a Comment