யாழில் பட்டிப் பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது! - Yarl Voice யாழில் பட்டிப் பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது! - Yarl Voice

யாழில் பட்டிப் பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது!



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் - சந்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் கோபூசை இடம்பெற்று பின்னர் கோபவணி, மற்றும் கோமாதா கீர்த்தனங்கள் என்பன முறையே இடம்பெற்றது.

கோபவணியானது ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதி ஊடாக மின்சார நிலைய வீதி, யாழ் பேருந்துநிலைய மேற்கு வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.

குறித்த கோமாதா உற்சவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சமய குருமார்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பாடசாலை மாவர்கள் மற்றும் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post