ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ, அரசாங்கக் கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்களின் கூட்டத்திலோ மாத்திரமே விவாதிக்கப்பட வேண்டும்.
அரசியல் தலைமைகள் இதனை கவனத்திற்க் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் வினவியபோது,
பொது மக்கள் தனிநபர்களை ஆட்சி செய்வதற்கு வாக்களிக்கவில்லை எனவும், தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுவதை பிரஜைகள் அறிவார்கள் என்றும் . அரசாங்க அரசியல்வாதிகள் என்ற வகையில் கருத்துக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் அவர் ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாகப் போட்டியிடுவது குறித்த தீர்மானது தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment