சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை பானுகராஜபக்ச மறுபரிசீலனை செய்யவேண்டும் என லசித்மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டிற்கு பானுக்க வழங்ககூடிய பங்களிப்பு இன்னமும் நிறைய உள்ளதாக மலிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் உங்கள் நாட்டை பிரதிநிதித்துவம் செய்வது சாதாரண விடயமல்ல என தெரிவித்துள்ள லசித்மலிங்க வீரர்கள் பலசாவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பானுகராஜபக்ச இலங்கைக்கு வழங்ககூடிய பங்களிப்பு இன்னமும் உள்ளது என நான் உண்மையாக நம்புகின்றேன் - அவர் தனது முடிவு குறித்து மீள சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment