ராஜபக்ஷ பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, ஆனால் அது தற்காலிகமானதென நான் நம்புகிறேன்'' நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்
கேள் வி; 2019 இல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மகத்தான வெற்றியைப் பெற்றார். மேலும் 2020 இல், பிரதமர் மகி ந்த ராஜபக்ச வும் நீங்களும் கூட உங்கள் தொகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று சாதனைகளை புரிந்துள்ளீர்கள் .
நீங்கள் ராஜபக்ச பெயரை கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரப்படுத்தினீர்கள். ஆனால் இன்று 2022ல், குடும்ப அரசியலால் நாம் இப்போது கொண்டிருக்கும் நெருக்கடிகளால் இந்தப் பெயரே உங்கள் பிரபல்யத்தை குறைத்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
பதில்;பாருங்கள் , எந்தவொரு அரசியல்வாதியின் புகழும் எப்போதும் உச்சத்தில் இருக்காது. தலைவர்களின் புகழ் எப்போதும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களின் தேவைகள் பெருமளவில் மாறுகின்றன.
எனவே அரசியல்வாதிகளும் தங்கள் வாக்காளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், மக்களுக்கு எது சரியானது என்பதைப் பூர்த்தி செய்வதற்கும் தங்கள் கொள்கைகளை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். ராஜபக்சா க்கள் எப்போதுமே விவசாயிகளுக்கு நட்புறவான கிராமப்புற தை அடிப்படையாக கொண்ட குடும்பம்.
எங்கள் பரம்பரை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவேஇ ரசாயன உரத்திலிருந்து இயற்கை உரத்திற்கு மாறுவதை அடிப்படையாகக் கொண்டு திடீரென ஒரு கடுமையான முடிவை எடுக்கும்போது, ஆம், புகழ் பாதிக்கப்படும். அதில் நான் உங்களுடன் உடன்பட மாட்டேன் எ ன்றில்லை
கேள் வி; நான் உர விவகாரத்தை மட்டும் குறிப்பிடவில்லை அமைச்சரே . இன்று இந்த நாட்டில் உள்ள டொலர் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற ஏனைய பிரச்சினைகளை பற்றியும் பேசுகின்றேன்.
இந்த தோல்விகளுக்கு சாமானியர்கள் அரசை குற்றம் சாட்டுகின்றனரே ?
பதில்;நாங்கள் பொறுப்பேற்றபோது உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். 10, 12 வருடங்கள் தொடர்ந்து எந்த அரசியல்வாதியும் அல்லது அரசியல் குடும்பமும் பிரபலமாக உயர்ந்ததில்லை.
ராஜபக்சவின் பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது ஆனால் இது தற்காலிகமானது என்று நான் நம்புகிறேன்.
திருப்தியடைபவர்களும் திருப்தியடையாதவர்களும் எப்போதும் இருப்பார்கள். ஆனால் நாளின் முடிவில், மக்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.பரம்பரை அரசியல் இப்போது இல்லை. இது நவீன அரசியல்.
ஆனால் அதே நேரத்தில், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும். குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான படுகொலை முயற்சியின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த போது, அந்த முடிவில் நாங்கள் நின்றோம்.
நாங்கள் மிகவும் கடினமான நேரத்தைச் சந்தித்தோம், நாங்கள் கடன் வாங்க வேண்டிய நேரம் கூட இருந்தது. ஆனால் இன்று நாம்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பலனை அறுவடை செய்கிறோம்.
எனவே அரசியல்வாதிகள் தங்கள் பிரபலத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது . ஆனால், அவர்கள் மக்களுக்கு எவ்வாறு வழங்கப்போகிறார்கள் என்பது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது
Post a Comment