நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடமாடும் சேவையில் நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில் பொதுமக்கள் சேவை பெறும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னை, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment