திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்கு - Yarl Voice திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்கு - Yarl Voice

திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமைக்கு



எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை களிலும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக் கைகளைச் சாதாரண நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தநிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறையிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும், புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


0/Post a Comment/Comments

Previous Post Next Post