பசுமை விவசாய மாதிரி வீட்டுத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice பசுமை விவசாய மாதிரி வீட்டுத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice

பசுமை விவசாய மாதிரி வீட்டுத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு



சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசனையை பயனபடுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து இப் பசுமை வீட்டுத் தோட்டத்தின் மூலம் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க,சத்திதபாலன் தலமையில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இராணுவத்தின் 55 வது படை பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்தின, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாபரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post