அவிசாவளை நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் பருத்தித்துறை பெண்ணின் சடலம் மீட்பு ! - Yarl Voice அவிசாவளை நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் பருத்தித்துறை பெண்ணின் சடலம் மீட்பு ! - Yarl Voice

அவிசாவளை நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் பருத்தித்துறை பெண்ணின் சடலம் மீட்பு !



அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த  மூன்று பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை  பிரதேசத்தில்  உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இவர்கள் கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்  

தீடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதன் காரணமாக நீராடிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடிச்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று நபர்களை பிரதேச மக்கள் காபாற்றியுள்ளனர் 

ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்  உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எட்மன் ஜேவதாஸ் உஷாரா என்பவராவர் மேலும் காணாமல் போன இருவரும் நேற்று முன்தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் 

பருத்தித்துறையைச் சேர்ந்த  எட்மன் ஜேவதாஸ் மிதுர்ஷா வயது 14 மற்றும் வேவனி ஜேசுதாஸ் வயது 29 ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post