எங்கள் பக்கம் வாருங்கள்- சுசிலுக்குச் சஜித் அணி அழைப்பு! - Yarl Voice எங்கள் பக்கம் வாருங்கள்- சுசிலுக்குச் சஜித் அணி அழைப்பு! - Yarl Voice

எங்கள் பக்கம் வாருங்கள்- சுசிலுக்குச் சஜித் அணி அழைப்பு!



ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.”

- இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தரவுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. கூறியவை வருமாறு:-

"இது ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிக்கு, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் உரிமை இருக்க வேண்டும். 

அந்தவகையில் மக்களின் குரலாகவே சுசில் பிரேமஜயந்த ஒலித்தார். அதற்காக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஜனநாயகம் இல்லாத, அடக்குமுறை தலைவிரித்தாடும், மக்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளாத கட்சியில் இனியும் இருக்க வேண்டாம்.

 ஜனநாயகத்தை மற்றும் மக்களை நேசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post