பிரியந்த குமாரவின் படுகொலைய நியாயப்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டிய நபருக்கு பாக்கிஸ்தான் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரியந்த குமாரதாக்கப்படும் வீடியோவை தனது யூடியுப்பில் பதிவேற்றிய முகமட் அட்னான் என்ற 27 வயது நபர் கொலையையும் உடல் எரியூட்டப்படுவதையும் நியாயப்படுத்தியிரு;தார்.
இதனை தொடர்ந்து மதகுரோதத்தை பரப்பி பொதுமக்களின் உணர்வுகளை தட்டிஎழுப்பிய குற்றச்சாட்டினை பொலிஸார் அந்த நபருக்கு எதிராக பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற விசாரiணியன் பின்னர் அந்த நபருக்கு நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது
Post a Comment