யாழ் கொடிகாமம் கரம்பை குறிஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நூலக அபிவிருத்திக்காக தேசிய லொத்தர் சபையினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையின் அதிபர் கண்ணதாசன் தலமையில் இன்று காலைநடைபெற்ற இந் நிகழ்வில் லொத்தர் சபையின் பணிப்பாளர்
டிஜி.ஜெயசிறியினால் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
பாடசாலைகளின் நூலக அபிவிருத்திக்காக தேசிய லொத்தர் சபையினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் முல்லைதீவு மன்னார் ஆகிய 4 பாடசாலைகளுக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதன் தொடராக இன்றையதினம் இப் பாடசாலைக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
Post a Comment