யாழ்ப்பாண மக்களின முனனேற்றத்திற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவி செய்யும்! அரச தமிழரிடம் இராணுவ தளபதி உறுதி - Yarl Voice யாழ்ப்பாண மக்களின முனனேற்றத்திற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவி செய்யும்! அரச தமிழரிடம் இராணுவ தளபதி உறுதி - Yarl Voice

யாழ்ப்பாண மக்களின முனனேற்றத்திற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவி செய்யும்! அரச தமிழரிடம் இராணுவ தளபதி உறுதி




யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி
மேஜர் ஜெனரல் DGS Senarath Yapu RWP RSP ndu அவர்களுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்றைய தினம் (07.01.2022) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி).எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் Covid-19 இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும்,விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள்,வீதி அபிவிருத்தி, நகர சுத்தப்படுத்தல்கள், மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் Covid-19 தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post