கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படவுள்ள தாகவும் மக்கள் பாண் கொள் வனவுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித் துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதைத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடில் பொது மக்கள் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment