மகளின் திருமண நிச்சயதார்த்தம் : புகைப்படம் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் - Yarl Voice மகளின் திருமண நிச்சயதார்த்தம் : புகைப்படம் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் - Yarl Voice

மகளின் திருமண நிச்சயதார்த்தம் : புகைப்படம் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்



இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். 

இந்திய சினிமாவில் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்ற இவர், இசை மட்டுமல்லாது பாடகர், எழுத்தாளர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். 

மேலும் பல படங்களில் பாடல்களில் சிறப்பு காட்சியில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் மலையாளத்தில் ஆரட்டு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில், லி முஷ்க் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது தமிழில், பத்து தல, கோப்ரா, பொன்னியின் செல்வன். அயலான், இரவின் நிழல், வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

 இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டடு ஷாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இநத தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா மற்றும் ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கஜீஜாவுக்கும் எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா என்ற பாடல் மூலம் புகழ்பெற்ற ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த டிசம்பர் 29-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post