இலங்கையும் சீனாவும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிக்கவேண்டும இந்து சமுத்திரத்தின் ஸ்திரதன்மை மற்றும் செழுமைக்கு உதவியாக அமையும் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்
சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் பின்னர் பத்திரிகையாளர்கள் சிலருடன் உரையாடியவேளை இலங்கைக்கான சீன தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறைகளில் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றங்கள் இருதரப்பு உறவுகளில் முக்கியமான விடயங்கள் என சீன தூதுவர்தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவும் இலங்கையும் இன்னமும் அதிகளவிற்கு இணைந்து செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, இறைமை பாதுகாப்பு ஸ்திரதன்மை ஆகிய விடயங்களில் இரு நாடுகளினதும் நலன்களிற்கு உதவியாக அமைவதுடன் மாத்திரமின்றி பிராந்தியத்தில் ஸ்திரதன்மையையும் செழுமையையும் பேணுவதற்கும் உதவப்போகின்றது என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிப்பது என்பது பிராந்திய வல்லரசான இந்தியாவையும்,இந்து சமுத்திரத்தில் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் தனது நடவடிக்கைளை விஸ்தரித்துள்ள சீனாவை கண்காணித்து வரும் அமெரிக்காவையும் பதற்றத்திற்குள்ளாக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது கொல்லை புறத்தில் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா ஏற்கனவே கரிசனை வெளியிட்டுள்ளது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் 2021 மே மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தார்.
Post a Comment