பருத்தித்துறை - துன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் படுகாயம் - Yarl Voice பருத்தித்துறை - துன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் படுகாயம் - Yarl Voice

பருத்தித்துறை - துன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் படுகாயம்



யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை - துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை(10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது- 27) என்பவரே கைப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post