அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு! குகதாஸ் குற்றச்சாட்டு - Yarl Voice அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு! குகதாஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு! குகதாஸ் குற்றச்சாட்டு



அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில் ஒரு ஐனநாயகத் தேர்தலை எதிர் கொள்ள முடியாது தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சமே ஒத்திவைப்புக்குகான பிரதான காரணமாகும்.

கொரோனா அச்சத்தின் மத்தியில் பாராளுமன்ற தேர்தலை நடாத்திய ஐனாதிபதி தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு கொரோனா அச்ச நிலை ஓரளவு சாதாரண நிலையை அடைந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடையும் நிலையில் அதன் ஆயுட் காலத்தை நீடிக்கும் வர்த்தமானியை வெளியிட்டார் என்றால் அவர்களால் தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.

வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க விட்ட சாதனையின் அறுவடையை இனி வரும் தேர்தலில் பெற வேண்டி வரும் என்ற தெளிவு ஆட்சியாளர்களுக்கு புரியும் அந்தப் புரிதலின் முடிவு தேர்தல் ஒத்திவைப்பு. 

2024 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள நாடடின் தற்போதைய ஆட்சியாளர்களினால் முடியாத நிலைமை உருவாகி விட்டது என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவது போல மாகாணசபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்றங்களின்  தேர்தல்கள் நடாத்தப்படாது ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தற்போதைய அரசாங்கம் கால நீடிப்பு செய்ய முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.

அன்று ஐெ ஆர் செய்த மாதிரி இன்றைய ஐீ ஆர் செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில்   நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post