யாழ் வர்த்தக சங்கத்தினருடன் சஜித் சந்திப்பு - Yarl Voice யாழ் வர்த்தக சங்கத்தினருடன் சஜித் சந்திப்பு - Yarl Voice

யாழ் வர்த்தக சங்கத்தினருடன் சஜித் சந்திப்பு



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் யாழ் வணிகர் கழகத்தில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.

யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரண, எரான் விக்கிரமரட்ன ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஸ் மற்றும்  வணிகர் கழகத்தினர் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கில் வேலையற்றவர்களின் பிரச்சனை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இயங்கி வந்த கைத்தொழில் நிலையங்கள் இயங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post