அரசியல் இலாபத்திற்காக பொய்யை உண்மைக்கு முயல்வதாக விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு - Yarl Voice அரசியல் இலாபத்திற்காக பொய்யை உண்மைக்கு முயல்வதாக விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு - Yarl Voice

அரசியல் இலாபத்திற்காக பொய்யை உண்மைக்கு முயல்வதாக விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு




13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி(சைக்கிள் கட்சி) மக்களை குழப்பி வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி வி விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட போகின்றது என அறிந்த சைக்கிள் கட்சியினர் அதில் போட்டியிடுவதற்காக இப்போதே 13 எதிர்க்கிறோம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.


 13 வேண்டாம் மாகாணசபை வேண்டும் என கூறும் சைக்கிள் காட்சி மக்களுக்கு எதனைக் கூற முற்படுகிறது.

ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் போனேஸ் அன்ரு என்ற அமைச்சர் இருந்தார் அவர் ஒரு வசனத்தை தெரிவித்திருந்தார் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அது மெய்யாகி விடுவதாக.

தான் இந்த கட்சி மக்கள் மத்தியில் 13 தொடர்பில் இந்தியாவுக்கு சொல்லாத விடையத்தை சொன்னதாக மக்கள் மத்தியில் பொய்யுரைத்து உண்மையாக்க முயல்கிறது.

13 தொடர்பில் இந்தியா பிரதமர் ராஜீவ் காந்தியிடம் அப்போதைய தமிழ் தலைவர்களாக இருந்த அமிர்தலிங்கம் சிவசிதம்பரம்  ஆகியோர்  தெளிவாகக் கூறி விட்டார்கள் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் தீர்வாக அமையாது என .

நாமும் அதைத்தான் இந்தியாவிடம் தெரிவித்திருக்கிறோம் 13 தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வாக அமையாது இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் இருக்கின்ற அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக 13ஐ நடைமுறைப் படுத்துங்கள் என கூறி இருக்கிறோம்.

ஆனால் சைக்கிள் கட்சியினர் தமிழ் தலைவர்கள் 13 மட்டும் போட்டுவட்டார்கள் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு விட்டார்கள் எனப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் மக்கள் இருக்கின்ற அதிகாரங்களை ஆவது தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் முதலமைச்சராக வடக்கு மாகாண சபையில் இருந்த போது 13இன் குறைபாடுகளைத் தெளிவாகக் கூறி இருந்தேன்.

 தற்போது வவுனியாவில்  500 சிங்களக் குடியேற்றங்களை புதிதாக குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது அதுமட்டுமல்லாது வடக்கு கிழக்கில் 65,000 ஏக்கர் காணி பாதுகாப்புத் தரப்பு காணப்படுகிறது

இவ்வாறான நிலைமைகள் தொடராமல் இருப்பதற்கும் ஓரளவேனும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரமுள்ள மாகாண சபை தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ளது.

ஆகவே 13 தொடர்பில் உண்மைகள் தெரிந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக  தேவையற்ற பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post