தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.
அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான் ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்; முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை’ என்ற பாடலாசிரியர் முத்துக்குமாரின் முத்தான வரிகள். இப்படிப்பட்ட பந்தத்தை, அன்பை விவரிக்கும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
அந்த வைரல் புகைப்படத்தில் தந்தையும், மகளும் தலையை முட்டியபடி இருக்கின்றனர். அதில் இருவரது தலையும் கொஞ்சம் ஷேவ் செய்யப்பட்டுள்ளது.
மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மகளை போலவே தனது தலையையும் ஷேவ் செய்து கொண்டுள்ளார் அந்த பாசக்கார தந்தை. அதில் தனது மகளுக்கு இருப்பது போலவே தையல் போட்ட அடையாளத்தையும் தவறாமல் இடம் பெற செய்துள்ளார் அவர். இது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதுமில்லை.
“இந்த பிஞ்சு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய அப்பா தனது தலையிலும் அப்படி இருப்பதை போல ஷேவ் செய்துள்ளார்! என் கண்கள் கலங்குகிறது” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்தில் மட்டும் இந்த படத்திற்கு 8000 லைக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரம் ரீ ட்வீட்டுகள் செய்யப்பட்டுள்ளன.
Post a Comment