அரசியல் நிகழ்ச்சி நிரலிற்குள் சிக்காமல் ஊடகங்கள் மக்களிற்கு சமூகத்தில் நிலவும் பல பிரச்சினைகள் குறித்து உண்மையை தெரிவிக்கவேண்டும் என கர்தினால்மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களை தழுவி உண்மையை மறைத்தால் ஊடகங்களால் நீண்டகாலம் நீடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சில ஊடக நிறுவனங்கள் உண்மையை மறைப்பது கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் ஆளும் கட்சியினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளிற்கு உகந்த விதத்தில் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் உள்ளன சில அரசியல் தலைவர்கள் மற்றும் சில கொள்கைகளை வரவேற்கும் வாசகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயலும் ஊடகங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் நீண்ட காலம் நிலைக்க மாட்டார்கள் அரசியல் கட்சிகளும் நீண்ட காலம் நிலைக்கப்போவதில்லை அரசியல்வாதிகளின் தேவைகளைபூர்த்தி செய்யும் ஊடக நிறுவனங்களும் நீண்ட காலம் நிலைக்கப்போவதில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைக்கும் ஊடகம் உண்மை வெளிவந்தவுடன் அழிந்துபோகும் உண்மை ஒரு நாள் வெளிவரும் இதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment