வடக்கின் ஜந்து மாவட்டங்களுக்கும் ஆளுநர் நேரடி விஜயம்! மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே நோக்கமாம் - Yarl Voice வடக்கின் ஜந்து மாவட்டங்களுக்கும் ஆளுநர் நேரடி விஜயம்! மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே நோக்கமாம் - Yarl Voice

வடக்கின் ஜந்து மாவட்டங்களுக்கும் ஆளுநர் நேரடி விஜயம்! மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே நோக்கமாம்



வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நேரில் சென்று மக்கள் பிரச்சினைளை ஆராய்வேன். ஆளுநர் ஜீவன் தியாகராஜா

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் என்னிடம் வருகின்றன.

பிரதேச மட்டங்களில் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் ஆளுநர் அலுவலகம்  வரை வருவது கவலைக்குரிய விடயம்.

இவ் வருடம் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்தில் ஆகக் குறைந்தது 5 நாட்கள் என்ற அடிப்படையில் வருடத்தில் மூன்று தடவைகள்  மக்களின் பிரச்சினைகளை நேரில் ஆராய உள்ளேன்.

தா மாவட்டங்களிலிருந்து தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் என்னிடத்தில் வருகின்ற நிலையில் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது. 

அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்.இதற்குப் பிறகு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதாவது அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகளை  தொடர்பில் ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை  விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் .

மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்தில் நேரில் சென்று அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post