அரசபுலனாய்வு பிரிவினர் என்னை வேவு பார்ப்பதை விட்டு மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்க வேண்டும் - சுசில் பிரேமஜயந்த - Yarl Voice அரசபுலனாய்வு பிரிவினர் என்னை வேவு பார்ப்பதை விட்டு மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்க வேண்டும் - சுசில் பிரேமஜயந்த - Yarl Voice

அரசபுலனாய்வு பிரிவினர் என்னை வேவு பார்ப்பதை விட்டு மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்க வேண்டும் - சுசில் பிரேமஜயந்த



அரசபுலனாய்வு பிரிவினர் என்னை வேவுபார்த்தனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புலனாய்வு துறையினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே சுசில்பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டார் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறிப்பிட்டநாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு  புலனாய்வு பிரிவினரின் அறிக்கை எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில்  அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள்; விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள சுசில்பிரேமஜயந்த  இது மிகவும் பாரதூரமான அறிக்கை புலானாய்வு பிரிவினர் என்னை போன்றவர்களை பின்தொடர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினர் என்னை பின்தொடர்வதை விட்டுவிட்டு வீதிகளிற்கு சென்று சமையல் எரிவாயுவிற்காகவும்இமண்ணெண்ணைக்காகவும் பொருட்களை வாங்கவும்வரிசையில் நிற்பவர்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுத்தால் அது பயனுள்ளதாக காணப்படும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடியுங்கள்  என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் ஏன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பதைகண்டுபிடித்து அரசாங்கத்திற்கு அறிக்கை வழங்குங்கள் அவர்கள் தீர்வை வழங்குவார்கள் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post