புங்குடுதீவில் பனைமரக் குற்றிகள் கடத்தல் விவகாரம் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை! வேலணை பிரதேச செயலாளர் தெரிவிப்பு - Yarl Voice புங்குடுதீவில் பனைமரக் குற்றிகள் கடத்தல் விவகாரம் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை! வேலணை பிரதேச செயலாளர் தெரிவிப்பு - Yarl Voice

புங்குடுதீவில் பனைமரக் குற்றிகள் கடத்தல் விவகாரம் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை! வேலணை பிரதேச செயலாளர் தெரிவிப்பு



யாழ் புங்குடுதீவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பனைமரக் குற்றிகளுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும்  தொடர்பு கிடையாது என  வேலணை பிரதேச செயலாளர் எஸ் கிரிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் புங்குடுதீவில் இருந்துவரும் மூலம் விளம்பர உத்திகள் மற்றும் சீவிய மரங்களுடன் லொறி ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

புங்குடு தீவில் இருந்து ஒன்பது பனைமரங்களில் இருந்து 55 சீவிய மரத்துண்டுகளை ஏற்றுவதற்காக பிரதேச செயலகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு மேலதிகமாக பல பனைமரத் துண்டுகள் ஏற்றப்பட்ட நிலையில் பொலிசாரால் குறித்த லொறி சோதனையிடப்பட்டு கைது செய்யப்பட்டது.

சில ஊடகங்களில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராமசேவையாளருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அவதானிக்க முடிந்தது.

பனைமரம் ஏற்றுச் செல்வதற்கும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் நிர்வாக நிர்வாக நீதியான எவ்வித தொடர்பும் இல்லை.

அகவே அனுமதி கடிதத்தை மீறி அளவுக்கு அதிகமான மரங்களை ஏற்றியமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் எம்மால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை  பொலிசாரிடம் தெளிவு படுத்தியுள்ளேன்.

ஆகவே பிரதேச செயலக அதிகாரிகள் குறித்த பயணமாக கடத்தலுக்கும்  தொடர்பு இல்லை என்பதை கூறிக் கொள்வதோடு சம்பந்தப்பட்டிருந்தால் பொலிஸ் விசாரணைகளில் தெரியவரும் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post