ஜனாதிபதி என்னை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஏன் நீதிமன்றம் சென்றார்கள் என சிந்திக்கவேண்டும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
அரசமைப்பில் அமைச்சர்களின் கூட்டு பொறுப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் அமைச்சரவையின் கூட்டு தீர்மானத்திற்கு எதிராக ஏன் சில அமைச்சர்கள் நீதிமன்றம் சென்றனர் எனகேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளராக 11 வருடங்கள் பணியாற்றியவேளை எனது ஒழுக்கம் எவ்வாறிருந்தது என்பதை மகிந்த ராஜபக்சவிடமிருந்து அறிய விரும்புகின்றேன் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
செயல்திறன் என்பது சரியான விடயங்களை செய்வது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காகவே என்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment