கல்வியாளர் பஞ்சலிங்கம் அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிப்பு - Yarl Voice கல்வியாளர் பஞ்சலிங்கம் அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிப்பு - Yarl Voice

கல்வியாளர் பஞ்சலிங்கம் அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிப்பு




மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் "அன்பே சிவம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும், விருது வழங்கலும் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் முன்னாள் அதிபர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற திருமந்திரப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் சான்றிதல்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் இராசேந்திரம் குருபரன், ஓய்வுநிலை நீதிபதி இ.வசந்தசேனன், விரிவுரையாளர்கள், அகில இலங்கை சைவ மகா சபையினார், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post