யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
வீதியமைக்கும் பணிகளுக்கான செப்பனிடல் பணிகளை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் பொதுமக்களின் காணியூடாக அமைக்கப்படும் வீதி கட்டுவன் சந்தியிலிருந்து மயிலிட்டி செல்லுகின்ற காப்பெற் வீதியுடன் இணைக்கும் பணிகள் இடம்பெற்றன.
விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது.
Post a Comment