சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பெண்ணிடம் விசாரணை: விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியவர்? - Yarl Voice சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பெண்ணிடம் விசாரணை: விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியவர்? - Yarl Voice

சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பெண்ணிடம் விசாரணை: விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியவர்?



சென்னை விமானநிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தாக கைது செய்யப்பட்ட பெண், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுபவர் என தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒரு பெண் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் மேரி பிரான்சிஸ்கோ லட்சுமணன் என்பதும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சென்னை வந்து தங்கியிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் வீடு ஒன்றை லீசுக்கு எடுத்து தங்கியிருந்ததும், அந்த முகவரியின் பெயரில் முறைகேடு செய்து ஆவணங்களை பெற்று பாஸ்போர்ட் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதி திரட்டி வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னர் அந்த அமைப்பின் நிதி திரட்டும் பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

மும்பை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்து அவர் நிதி திரட்டி வந்ததும் போலி ஆவணங்கள் மூலம் வங்கியிலிருந்து பணத்தை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

 இலங்கை பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் தொடர்புடைய கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், செல்லமுத்து என்பவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post