தென் சீன கடல் பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க கடற்படையின் ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பலான USS BENFOLD சீன கடற்படை மற்றும் விமானப்படையால் பின் தொடரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் தங்களது நாட்டு எல்லையிலிருந்து வெளியேறுமாறு சீன கடற்படை வற்புறுத்திய நிலையில் சீன கடற்படை மற்றும் விமானப்படை பின் தொடர்ந்து கப்பலை வெளியேற்றியதாக கூறியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஏழாவது படையணி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களது கப்பல் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும் தங்களது பணி முடிந்த பிறகே புறப்பட்டு சென்றதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment