போலீஸ் வரை சென்ற விவகாரம்.. ஆஷஸ் டெஸ்ட் வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த சர்ச்சை..! - Yarl Voice போலீஸ் வரை சென்ற விவகாரம்.. ஆஷஸ் டெஸ்ட் வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த சர்ச்சை..! - Yarl Voice

போலீஸ் வரை சென்ற விவகாரம்.. ஆஷஸ் டெஸ்ட் வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த சர்ச்சை..!



மதுபோதையில் அதிகம் சத்தம் போட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் மது அருந்தி கொண்டாடினர். அப்போது இங்கிலாந்து வீரர்கள் சிலரும் ஆஸ்திரேலியா வீரருடன் இணைந்து மது அருந்தினர். 

அதில் ஆஸ்திரேலிய வீரர்களான நாதன் லியான், ட்ராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது அந்த ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் அதிக சத்ததுடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், உடனே வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் மது குடித்துக் கொண்டே இருந்ததால் போலீசார் வீரர்களை கடுமையாக எச்சரித்தனர். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை இங்கிலாந்து தழுவியுள்ளது. 

இப்படி உள்ள சூழலில் ஆஸ்திரேலியா வீரர்களுடன் இங்கிலாந்து கேப்டன் மது அருந்தி சர்ச்சையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post