காரைநகர் கசூரினா கடலில் சக நண்பர்களுடன் இணைந்து நீந்திய போது இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த குறித்த இளைஞர்
18 வயதான கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த யோகராசா யோகீசன் என தெரிவிக்கப்படுகின்றது.
மழைக்கு மத்தியில் புத்தாண்டு தினமான இன்று கோண்டாவிலில் இருந்து 20 பேர் கொண்ட இளைஞர் குழு வான் ஒன்றை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சுற்றுலா சென்று நீந்தியுள்ளனர். இதன்போது திடீரெனக் கடல் அலையில் இருவர் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரு இளைஞனைக் கடற்படையினர் முயன்று காப்பாற்றிய போதிலும் மற்றைய இளைஞன் நீண்டநேர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
Post a Comment