தமிழர் விடுதலைக் கூட்டணி என்கின்ற பாரம்பரிய காட்சியினை ஒரு குழுவினர் அபகரிக்கும் நோக்கில் நடாத்தப்படவுள்ள கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டதாவது இன்றைய தினம் 24.1.2022
திங்கட்கிழமை ஒரு கூட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக அறிகிறேன்.
தமிழ் விடுதலை கூட்டணியை அபகரிக்கும் நோக்கில் சில மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக எனது சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
ஆகவே குறித்த சட்ட விரோதமான குழுவை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியினால் கையெழுத்திடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment