மக்களின் நடவடிக்கையே நாட்டை மீண்டும் முடக்குவதா? இல்லையா எனத் தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸைக் கட்டுப்படுத்த மக்கள் சுகாதாரத் துறைக்கு ஒத்துழைக்கா விட்டால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்து ஏற்படும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்நிலை தொடர்ந்தால் இறுதியில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியால் நாட்டை மீட்டெடுக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நாட்டின் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொரோனா தடுப்பூசியைச் செலுத்த மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் அதை விரைவில் பெறுவதே தற்போது வைரஸில் இருந்து விடுபட சிறந்த வழி என்றும் சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment