சுழிபுரம் மேற்கு பகுதியில் 1974-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இடம்பெற்று வருகின்ற இலவசக் கல்வி நிலையத்தில் இடம்பறுகின்ற இலவசக் கல்வியை பெற்று பல்கலைக்கழகத்தை அடைந்த மாணவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு தமது கீழ்வரும் சந்ததியினரையும் உயர்கல்வியை பெற்று வைக்கும் முகமாக சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர்.
இந்த நிலையில் இவ்வருடம் குறித்த கல்வி நிலையத்தில் இலவசமாக கல்வியைப் பெற்று 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றதை இட்டு குறித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று பிற்பகல் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.
மேலும் குறித்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக தமது செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமக்கான பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தையும் இன்றைய நாளில் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பரா நந்தகுமார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வருகை நிலை விரிவுரையாளர் இலங்கை தொழில் திணைக்கள அதிகாரி பா. கபிலன், விக்டோரியா கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், கலைமகள் இலவசக் கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment