யாழ் நாவற்குழியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து! - Yarl Voice யாழ் நாவற்குழியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து! - Yarl Voice

யாழ் நாவற்குழியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து!



யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த சம்பவம் இன்ற காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்து ட்றான்ஸ் போமருடன் மோதி கம்பிகள் அறுந்துள்ளது. இதனால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது. 

மேலும் குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்தபோதும் அதில் பயணித்தவா்கள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனா். சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post